ரூ.40 லட்சம் மதிப்பிலான தக்காளி கூழாக்கும் இயந்திரம் - அமைச்சர் எஸ்.பி வழங்கினார்

ஈஷா அறக்கட்டளையின் வழிகாட்டுதலில் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தக்காளி கூழாக்கும் இயந்திரத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி இன்று வழங்கினார்.

ஈஷா அறக்கட்டளையின் வழிகாட்டுதலில் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான தக்காளி கூழாக்கும் இயந்திரத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி இன்று வழங்கினார்.

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் லாபகரமாக இயங்கி வருகிறது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் ஆலோசனையின்படி, தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1,063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தேங்காய், பாக்கு மற்றும் காய்கறி ஆகியவற்றை விவசாயிகளே இந்நிறுவனத்தின் மூலம் அறுவடை செய்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.



இதனால், இந்நிறுவனம் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் மட்டும் 7.91 கோடி ரூபாய் வர்த்தகம் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் கரடிமடையில் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கு.ராசாமணி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினர். அதன் ஒருபகுதியாக, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாட்டை பாராட்டி, அதை ஊக்கப்படுத்தும்விதமாக ரூ.40 லட்சம் மதிப்பிலான நடமாடும் தக்காளி கூழாக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

விழாவில் அந்த இயந்திரத்தின் சாவியை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி வழங்கினார். ஈஷா பிரம்மச்சாரி சுவாமி அபிபாதா, வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் திரு. குமார், நிறுவனத்தின் இயக்குநர்கள் திரு.வேலுமணி, திரு.கிஷோர், திரு.கிட்டுசாமி ஆகியோர் அமைச்சரிடம் இருந்து சாவியை பெற்றுக்கொண்டனர்.

விவசாயிகளின் நலனுக்காக 3 ஆண்டுகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மூலம் தக்காளி மற்றும் பழங்களை சாறாகவும், ஜாம், சாஸாகவும் மாற்றி மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய முடியும். குறிப்பாக, விரைவில் அழுகும் தன்மை கொண்ட தக்காளியை சாஸாகவோ, ஜாமாகவோ மாற்றி விற்கும் போது விவசாயிகளின் வருவாய் இழப்பு தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...