பருவமழையால் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்படும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தபட்ட மலை இரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலைரயில் போக்குவரத்து இயக்கபட்டு வருகிறது. உலக புகழ்பெற்ற இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை கண்டு ரசிக்க உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் வட கிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரியில் பகுதியில் தீவிரமாக பெய்து வந்ததால் மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மன்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டதால் ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில்பாதை சேதமடைந்தது.
இதனையடுத்து பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மேலும் அசம்பாவிதஙகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 31, 1, 2 ஆகிய தேதிகள் வரை மலை ரயில் போக்குவரத்து மூன்று நாட்கள் தெற்கு ரயில்வே நிர்வாகம ரத்து செய்தது.
இந்த நிலையில் தற்போது பருவமழை குறைந்துள்ளதால் கடந்த மூன்று நாட்களாக ரத்து செய்யபட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளது. இன்று வழக்கம் போல் 100 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறபட்டு சென்றது. இதனால் முன்பதிவு செய்து கடந்த மூன்று நாட்களாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களது குடும்பத்தினருடன் பயணம் செய்தனர்.