கண் சிகிச்சைக்காக உரியவர்களை தேடிப்பிடித்த சேவை மனப்பான்மை கொண்ட தேசிய மாணவர் படையினர்

கோவை : கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர்படை அமைப்பின் மூலம் one cadet - one vision என்ற இலவச கண் பரிசோதனை முகாமை கோவை சங்கரா கண் மருத்துவ மையத்துடன் இணைந்து நடத்தியது.

கோவை : கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர்படை அமைப்பின் மூலம் one cadet - one vision என்ற இலவச கண் பரிசோதனை முகாமை கோவை சங்கரா கண் மருத்துவ மையத்துடன் இணைந்து நடத்தியது.

இந்த முகாமை பள்ளியின் தாளாளர் ததேயு பால்ராஜ், தேசிய மாணவர் படை கமான்டிங் அதிகாரி லெப்டினட் கர்னல் கிரிஸ் பர்தான் ஆகியோர் தொடங்கிவைத்தனர். சங்கரா கண் மருத்துவ மைய மருத்துவர்களான டாக்டர்.ராம குமார், டாக்டர்.ரிசிக்குப்தா, டாக்டர்.பூஜா குப்தா ஆகியோர் கலந்துக்கொண்டு கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, பரிசோதனை செய்து ஆலோசனை மற்றம் இலவச அறுவை சிகிச்சைக்கும் தோர்வு செய்தனர்.

இந்த முகாமின் சிறப்பு அம்சம் தேசிய மாணவர் படை மாணவர்களும் , மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்களுமே கண்குறைபாடு உள்ள வர்களை கண்டுபிடித்து முகாமுக்கு அழைத்து வர வேண்டும் என்பது தான். இளம்வயதிலேயே மாணவர்களுக்கு பெரியவர்களுக்கு உதவ வேண்டும் , சேவை மனப்பாண்மை உள்ளம் கொண்டவர்களாக வளர வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த முகாம் மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த முகாமில் பள்ளியின் தலைமையாசிரியை அமலோற்ப்பவ மேரி, ராணுவ வீரர்கள் மூர்த்தி, பல்வான் சிங், மணிகண்டன், மற்றும் ஆசிரிய பெருமக்களும் கலந்துக் கொண்டனர். இந்த முகாமல் 250 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 20 பேர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த முகாமை பள்ளியின் தேசிய மாணவ படை அலுவலர் ஜி.ஆல்பர்ட் அலெக்ஸ்சாணடர் ஏற்பாடு செய்திருந்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....