கோவை: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 858 பயனாளிகளுக்கு ரூ.16.17 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை: தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 858 பயனாளிகளுக்கு ரூ.16.17 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கோவை மாவட்டம், தென்கரை பேரூராட்சி, கரடிமடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து 1350 மனுக்களை பெற்றுக்கொண்டு 858 பயனாளிகளுக்கு ரூ.16.17கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பழனிச்சாமி, வருவாய் கோட்டாட்சியர் (தெற்கு) தனலிங்கம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) செல்வராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரபாகரன், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர் ராதாகிருஷ்ணனண் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.