கோவை: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவையாற்றும் வகையில், இரயில்வேதுறை சார்பில் கோவை இரயில் நிலையங்களில் பிரெய்லி முறையிலான அறிவிப்பு பதாகைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அறிவிப்புகள் எந்த மொழியில் இருந்தாலும் இரயில் நிலையங்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் பிரச்சனைகளை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. அன்றாடம் அதே இரயில் நிலையங்களில் பயணித்தாலும் கூட அதிகம் கூட்டம் இருக்கும் நேரங்களில் யாரேனும் ஒரு நல்ல உள்ளத்தின் உதவியில்லாமல் இவர்களால் தனியாக நடைமேடைகளை அடைந்துவிட முடியாத நிலைதான் தற்போதும் இருந்து வருகிறது.
இதனிடையே, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றும் வகையில், இரயில்வேதுறை சார்பில் குறிப்பிட்ட இரயில் நிலையங்களில் பிரெய்லி முறையிலான அறிவிப்பு பதாகைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடக மாநிலம் மைசூரு இரயில் நிலையத்தில் இந்த பதாகைகள் அமைக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நாட்டின் சராசரி பார்வை திறனாளிகளின் சதவீதத்தை விட கூடுதலாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கொண்ட மாநிலம் என்பதால் கர்நாடகாவில் மைசூருவை தொடர்ந்து பெங்களூரூ இரயில் நிலையத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதனிடையே, நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை அடுத்து தமிழகத்தில் தென்னிந்திய இரயில்வேயின் சேலம் கோட்டத்தில் கோவை இரயில் நிலையம் உட்பட 74 இரயில் நிலையங்களில் பிரெய்லி அறிவிப்பு பதாகைகள் அமைக்கப்பட உள்ளது.

இந்த பதாகைகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொட்டுணரும் வகையில் ஸ்டீல் தட்டுக்களில் பிரெய்லி எழுத்துக்களில், இரயில் நிலையத்தில் நடைமேடைகள், அறிவிப்பு மையங்கள், உதவி மையங்கள், ஆர்.பி.எப் வீரர்கள் இருக்குமிடம், குடிநீர், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுக்கள், கழிவறைகள் எங்கு உள்ளது என்பது பொறித்துவைக்கப்பட்டிருக்கும். இவற்றை கொண்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு யாருடைய துணையும் இல்லாமல் சென்று வர முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.
இந்த திட்டம் வருகிற திங்கட்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வர உள்ளதாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரயில் நிலையத்தின் பல பகுதிகளிலும் இந்த பதாகைகள் அமைக்கப்பட உள்ளதால் இது பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.