கோவை : மருதமலை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை : மருதமலை நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரகரா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்க்கடவுன் எனப்போற்றப்படும் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் மிக முக்கியமானது கந்த சஷ்டி விழாவாகும். சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி மிகமுக்கியமான நிகழ்ச்சியாகும். இதன் ஒரு பகுதியாக முருகப்பெருமானின் 7வது படைவீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்ரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

காளை வாகனத்தில் போர் அலங்காரத்தில் கோவிலை வலம் வந்த முருகப்பெருமான் வேல் ஏந்தி சூர சகோதரர்களை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி மலைக்கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது. அப்போது குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரகோரா முழக்கம் எழுப்பி முருகனை வழிபட்டனர்.

இதை தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு சாந்தி பூஜைகள் நடைபெற்றது. இதையும் திரளான பக்தர்கள் கூடி நின்று கண்டு களித்தனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான முருகன் தெய்வானை, வள்ளி திருமண நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.