இடைத்தேர்தலை போல உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் அதிமுகவை வெற்றி பெற செய்வார்கள்: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: இடைத்தேர்தல் வெற்றி போல உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் அதிமுகவை வெற்றி பெற செய்வார்கள் என திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர்: இடைத்தேர்தல் வெற்றி போல உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் அதிமுகவை வெற்றி பெற செய்வார்கள் என திருப்பூரில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட கோயில் வழி மற்றும் கணபதி பாளையம் ஆகிய பகுதிகளில் நெசவாளர்களுக்கான பொது இ-சேவை மையம் சங்க அலுவலக கட்டிடம் மற்றும் பயிற்சிக் கூடம் ஆகியவை 37 லட்சத்தில் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர், கட்டடங்களை திறந்து வைத்து கைத்தறி குழுமம் சார்பில் பல்வேறு நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெசவாளர்களின் வளர்ச்சிக்கு அம்மாவின் அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் எனவும் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களின் வெற்றி போல உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவை மக்கள் வெற்றி பெறச்செய்வார்கள் என்றார்.

இதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் 100% தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகள் மற்றும் அதற்கு காரணமாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 



இதில் கலந்து கொண்ட மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு பரிசு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி கவுரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....