கடந்த 3 ஆண்டுகளில்‌ 43,205 நீர்நிலைகள் தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தூர்‌ வாரப்பட்டுள்ளன : அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி

கோவை : வளர்ந்து வரும்‌ நகரங்களில்‌ மழைநீர்‌ சேகரிப்பு மற்றும்‌ நீர்‌ மேலாண்மை கருத்தரங்கினை துவக்கி வைத்த நகராட்சி நிர்வாகம்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி, கடந்த 3 ஆண்டுகளில்‌ 43,205 நீர்நிலைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தூர்‌ வாரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோவை : வளர்ந்து வரும்‌ நகரங்களில்‌ மழைநீர்‌ சேகரிப்பு மற்றும்‌ நீர்‌ மேலாண்மை கருத்தரங்கினை துவக்கி வைத்த நகராட்சி நிர்வாகம்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி, கடந்த 3 ஆண்டுகளில்‌ 43,205 நீர்நிலைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தூர்‌ வாரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி, கோவைப்புதார்‌ சி.பி.எம்‌.கல்லூரியில்‌ மாநகராட்சியுடன்‌ இணைந்து வளர்ந்து வரும்‌ நகரங்களில்‌ மழைநீர் சேகரிப்பு மற்றும்‌ நீர் மேலாண்மை குறித்த மாநில‌ அளவிலான கருத்தரங்கம்‌ நடைபெற்றது.

இக்கருத்தரங்கினை தொடங்கிவைத்து அமைச்சர்‌ வாழ்த்துரையில்‌ எஸ்‌.பி.வேலுமணி பேசியதாவது:-

மழைநீர் சேகரிப்புத்‌ திட்டம்‌ செயல்படுத்துவதில்‌, இந்தியாவிலேயே தமிழகம்‌ முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதன்மூலம்‌ மாநகராட்சி மற்றும்‌ நகராட்சி பகுதிகளில்‌, நிலத்தடி நீர் மட்டம்‌ உயர்ந்துள்ளது. தமிழகத்தில்‌ உள்ள நீர் நிலைகள்‌ மற்றும்‌ கோவில்‌ குளங்களை புனரமைக்க, நிலத்தடி நீர் பாதுகாப்பு திட்டத்தினை புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌, 2015ல்‌ அறிவித்தார். மாநகராட்சிகள்‌ மற்றும்‌ நகராட்சிகளில்‌ உள்ள நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக ஜெர்மன்‌ மேம்பாட்டு வங்கி நிதி, சீர்மிகு நகரத்திட்டம்‌ (Smart City) மற்றும்‌ அம்ரூத்‌ திட்டங்கள்‌ கீழ்‌ வளர்ச்சிப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீர் ஆதாரங்களைப் பராமரித்துப்‌ பாதுகாக்கவும்‌, பொதுமக்கள்‌ பங்கேற்புடன்‌ பாரம்பரியமான “குடிமராமத்து முறைக்கு அம்மாவின்‌ அரசு புத்துயிர்‌ அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடியார்‌ அவர்களின்‌ இந்த குடிமராமத்து திட்டத்திற்கு விவசாய பெருமக்களுக்கிடையே பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

2019-20 ஆம்‌ ஆண்டிற்கான வரவு-செலவுத்‌ திட்டத்தில்‌, பொதுப்பணித்‌ துறையின்‌ கீழ்‌ உள்ள ஏரிகளை மக்கள்‌ பங்களிப்புடன்‌ புனரமைக்கும்‌ “குடிமராமத்து' திட்டத்திற்கு எடப்பாடியார்‌ அரசு 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில்‌ 43,205 நீர்நிலைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ தூர்‌ வாரப்பட்டுள்ளன.

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்‌, பல்வேறு அரசு அலுவலக வளாகங்களில்‌, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்‌, பூங்காக்களில்‌ மழைநீரை சேகரித்து, அதை அந்த பூங்காக்களிலேயே பயன்படுத்துதல்‌ மற்றும்‌ கோவில்‌ குளங்களை புனரமைத்தல்‌ ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளது.

அம்மா அவர்களின்‌ அரசு, கடந்த 8 ஆண்டுகளில்‌, தமிழகத்தில்‌ உள்ள 15 மாநகராட்சிகள்‌, 121 நகராட்சிகள்‌, 528 பேரூராட்சிகள்‌ மற்றும்‌ 12,525 ஊராட்சிகளில்‌, நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ ஊரக வளர்ச்சித்துறையின்‌ சார்பில்‌ 37,826 கோடி ரூபாய்‌ மதிப்பில்‌ குடிநீர் திட்டப்‌ பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன்‌ செயல்படுத்தப்படும்‌ அம்ரூத்‌ திட்டத்தின்‌ கீழ்‌, மாநகராட்சி மற்றும்‌ நகராட்சிகளில்‌ 18 பெரிய குடிநீர்‌ திட்டப்‌ பணிகள்‌ ரூ.6,406 கோடி மதிப்பீட்டில்‌ செயல்படுத்தப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்‌ திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்‌ குமார்‌ ஜடாவத்‌ அவர்கள்‌ தொடக்கவுரையாற்றினார். மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி மற்றும் கல்லூரி கல்வி இணை இயக்குநர்‌ முனைவர்‌ பொன்‌.முத்துராமலிங்கம்‌ கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்‌.

சமூக ஆர்வலர்‌ எஸ்‌.பி.அன்பரசன்‌, ஆதித்யா அக்குவாடெக்‌ நிறுவனத்தலைவர்‌ அறிவுமணிராமசாமி, பேராசிரியர்கள்‌ எஸ்‌.சிவனேசன்‌, செந்தில்குமார்‌, ஆர்‌.பழனிவேலு, முனைவர்‌.பி.பார்த்திபன்‌, முனைவர்‌.சந்தானலட்சுமி, முனைவர்‌.சுகுமாரன்‌ மற்றும்‌ பேராசிரியர்கள்‌, மாணவர்கள்‌ கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர்‌ (பொறுப்பு) ஜஸ்வந்த்‌ மோகன சென்‌ அவர்கள்‌ வரவேற்புரையாற்றினார். வேதியியல்‌துறை தலைவர்‌ முனைவர்‌ ஆர்‌.தேவி அவர்கள்‌ நன்றியுரையாற்றினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....