நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை; தண்ணீரில் மூழ்கி அழுகிய பயிர்கள்

நீலகிரி : நீலகிரியில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி : நீலகிரியில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிலான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட மிளிதேன், எரிசிபெட்டா, இந்திரா நகர், காவிலோரை, வ.உ.சி நகர், குருக்குத்தி, ஓடந்துறை வழியாக நீரோடை செல்கிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது நீரோடையில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து, சுருங்கி விட்டதால் கனமழை பெய்யும் போது நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதனருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுவது வாடிக்கையாகி விட்டது.



இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக நீரோடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது பெய்த கனமழையால் காவிலோரை, சுள்ளிக்கூடு, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 35 ஏக்கர் விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கின.



இதேபோல, முத்தோரை, பாலடா போன்ற பகுதிகளில் 70 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த பீட்ரூட், கேரட் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன. மழைக்காலங்களில் இதே நிலை தொடர்ந்து நீடிப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இங்குள்ள நீரோடைகள் தூர்வாரி, நன்கு ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....