கோவை : வால்பாறையில் போதிய மகசூல் இருந்தும், தேயிலை கொழுந்து பறிக்க போதிய ஆட்கள் இல்லாததால் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். பணி ஓய்வு மற்றும் கடுமையான வேலை காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூர் கோவை மற்றும் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். இதனால், தற்போது 25 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். பணி ஓய்வு பெற்றவர்களும் பணியாற்றி வருகின்றனர்.
தேயிலை தோட்ட நிர்வாகத்தினர் கையினால் வெட்டும் கத்திரி, ஒருவர் இயக்கும் மின்சார கத்திரி மற்றும் சிறிய வாகனங்களை பயன்படுத்தி கொழுந்து பறிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனfர். மேலும் ஏஜென்டுகள் மூலம் அஸ்ஸாம், ஜார்கன்ட், பீகா, மத்தியபிரதேசம் போன்ற வட மாநிலங்களிலிருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுப் பணி புரிந்து வருகின்றனர்.

கடந்த 2 வாரங்களாக மழையும் வெயிலும் மாறி மாறி அடிப்பதால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால், போதிய ஆட்கள் இல்லாததால் கொழுந்து பறிக்க இயலாமல் முற்றி உள்ளது. போதிய மகசூல் இருந்தும் ஆட்கள் இல்லாததால் தேயிலை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.