கருமத்தம்பட்டி அருகே கார் விபத்து; கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் பலி

கோவை : கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி ஏற்பட்ட விபத்தில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை : கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி ஏற்பட்ட விபத்தில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் அலுவலகத்தில் உதவி நகரமைப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் மனோகரன். இவர் பணி நிமித்தமாக சென்னை சென்று விட்டு இன்று காலை கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது கருமத்தம்பட்டி காவல் நிலையம் அருகே அவர் வாகனமானது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மோதியது.



இதில், காரின் முன்னால் அமர்ந்திருந்த உதவி நகரமைப்பு அலுவலர் மனோகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டுனர் இயேசுதாஸ் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து இயேசுதாஸை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, அங்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார், மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....