கோவை : கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாளை முன்னிட்டு இறந்தவர்கள் நினைவு நாளாக, இறந்துபோன உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதியை இறந்தவர்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். இறந்துபோன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டும் நவம்பர் 2ம் தேதி (இன்று) இறந்தவர்கள் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்து கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் இருக்கும் புல் பூண்டுகள் வெட்டி அகற்றப்பட்டு சுண்ணாம்பு தெளித்து சீரமைத்து, பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி எரியவிட்டு அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று கல்லறை தோட்டங்களில் அஞ்சலி செலுத்துவதால் இந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இன்று காலையில் கிறிஸ்தவ ஆலயங்களிலும், மாலை 5 மணிக்கு கல்லறை தோட்டங்களிலும் இறந்தவர்களின் ஆன்மா இளைப்பாறுதலுக்காக திருப்பலி அல்லது சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அதைத்தொடர்ந்து கல்லறைகளை பங்கு அருட்பணியாளர்கள் புனித நீரால் தெளிப்பார்கள். இதனையொட்டி சுங்கம், சவுரிபாளையம், கோவை புதூர், செல்வபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கல்லறையில் தங்களது மூதாதையர்களுக்குப் பூக்கள் வைத்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.