கோவை : கோவையில் நேற்று இரண்டு இளைஞர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதையடுத்து, இன்று சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த சமீர் (22), உக்கடம் முதல்வீதி அண்ணா நகரை சேர்ந்த சவுரிதீன் (30) ஆகியோர் வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையானது டிஎஸ்பி சாகுல் அமீது தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர்களுடன் முகநூல் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, கைது செய்த இருவரையும் கோவை ரேஸ்கோர்ஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், இருவரும் நேற்று மாலை வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இப்படியிருக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை சமீர், சவுரிதீன் ஆகிய இருவரும் சென்னை தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் கொடுத்துள்ளனர். இதையடுத்து இருவரும் சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகினர். இதை தொடர்ந்து அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.