கோவை : கோவை மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட மலை கிராமங்களில் வசித்து வரும் மலைவாழ் மக்களிடம் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா தண்டர்போல்ட் போலீஸாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் நான்கு மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்ட மலையடிவாரங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் ஐபிஎஸ் உத்தரவின் பேரில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியை அதிகரித்துள்ளனர்.
அதேபோல, ஆனைகட்டி அருகே உள்ள மாங்கரை செக்போஸ்ட் போன்ற பகுதிகளில் வாகனத் தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வாகன தணிக்கையை துப்பாக்கி ஏந்திய போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று தொண்டாமுத்தூர், காருண்யா நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கல்குத்திபதி, சாடிவயல்பதி, வெள்ளபதி, சிங்கப்பதி,பொட்டப்பதி ஆகிய மலைக்கிராமங்களில் மலைவாழ் மக்களுக்கு காவல்துறை சார்பாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதேபோல காவல் துறை சார்பில் உடனடியாக தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.