நீலகிரி : நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் விழுந்த முக்கிய சாலைகளின் தடுப்பு சுவர்களை தற்காலிகமாக மணல் மற்றும் மண் மூட்டைகளை சீர் செய்வதற்கான பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குந்தா, கோத்தகிரி, குன்னூர், உதகை போன்ற பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
குறிப்பாக, குந்தா பகுதியிலும் குன்னூர்-மேட்டுப்பாளையம், சாலையிலும் பல்வேறு இடங்களில் தடுப்புச் சுவர்கள் இடிந்ததால் சாலைகள் சேதம் அடைந்தன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வந்தனர்.

இந்த நிலையில், இடிந்த தடுப்பு சுவர்களை சீரமைக்கும் விதமாக தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில் ஆயிரக்கணக்கிலான மணல் மற்றும் மண் மூட்டைகள் அடுக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், நிலச்சரிவுகள் ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் விதமாக ஆயிரக்கணக்கிலான மணல் மூட்டைகள் தயாராக இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.