கோவை : கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு பகிர்ந்தளித்து விவசாயிகள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
கோவை மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் மக்காச்சோள படைப்புழூ தாக்குதலைக் கட்டுப்படுத்த ரூ.15.05 லட்சம் மதிப்பில் 318 ஹெக்டேர் பரப்பிற்கு உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் தெளிப்பதற்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 20 நாட்களுக்கான பயிர்களுக்கு உயிர் பூச்சிக்கொல்லி மருந்தான ஆசாடிராக்டின் 1500 PPM மருந்து 2.5 லிட்டர் அளவில் தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2016-2018 ஆம் ஆண்டு வரை காரீப் மற்றும் ராபி பருவத்திற்கு 1875 விவசாயிகளுக்கு ரூ.108.65 லட்சம் எஸ்க்ரோ தொகை பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் உரிய காப்பீடு செய்த பயனாளிகள் விபரம் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையினரால் சரிபார்க்கப்பட்டு தற்போது வரை 1200 விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.89.31 லட்சங்கள் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டிற்கு காரீப் பருவத்திற்கு 2040 ஏக்கர் பரப்பளவு நிலம் கொண்ட 1598 விவசாயிகள் இணைந்துள்ளனர்.
வேளாண்மைத்துறை மூலம் 2019-20ம் ஆண்டுக்கு கூட்டுப் பண்ணையம் மேற்கொள்ள 19 குழுக்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 12 வட்டாரங்களில் இருந்து கிராமங்கள் மற்றும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இக்குழுக்கள் கூட்டாக பண்ணையம் செய்வதை ஊக்குவிக்க ரூ.5.இலட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள் வாங்க நிதி உதவி வழங்கப்படும்.
நீடித்த நிலையான மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத்தின் கீழ் கோடை உழவுக்கென்று ஒரு ஏக்கருக்கு ரூ.500/-ம், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளான தடுப்பணை கட்டுதல், கழிவுநீர் குட்டைகள் அமைத்தல் பணிகளுக்காக ரூ.5.லட்சமும், 50% மானிய விலையில் விதைகள், உயிர் உரங்கள், நுண் சத்து உரங்கள் வழங்கப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு அமைப்பதற்கு தொகுப்பு ஒன்றுக்கு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் தொகுப்பிற்கு தேவையான கசிவு நீர் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்துக் கொள்ளலாம்.
மேலும், கால்நடை பாரமரிப்பிற்கு தேவையான தாது உப்புகள், இனப்பெருக்க குறைபாடு நிவர்த்தி, மடிவீக்க நோய் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. மானாவாரி விவசாயத்திற்கு தேவைப்படும் விதைகள் மற்றும் இதர இடுபொருட்கள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்நிலங்களில் பயிரிட பனைமர விதைகள், மரக்கன்றுகள் மற்றும் பழமரக் கன்றுகள் ஆகியவை வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலமாக இலவசமாக பயிரிடப்படவுள்ளது.
விவசாயிகளிடமிருந்து விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களின் மீது தொடர்புடையதுறை அலுவலர்கள் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மேலும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை முறையாக பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, வேளாண்மைத் துறையின் சார்பில் மக்காச் சோள சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம துரைமுருகன், இணை இயக்குநர்(வேளாண்மை) சித்ரா தேவி, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இந்துமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சிவசுப்பிரமணியன், தோட்டக்கலை துணை இயக்குநர் உமாராணி, உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.