பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜி.வரதராஜின் 83வது பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை : பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அதன் முன்னாள் நிர்வாக அறங்காவலர் ஜி வரதராஜின் 83வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜி.வி. எண்டோவ்மென்ட் ஓரேஷன் (G.V. Endowment Oration) என்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கோவை : பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அதன் முன்னாள் நிர்வாக அறங்காவலர் ஜி வரதராஜின் 83வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜி.வி. எண்டோவ்மென்ட் ஓரேஷன் (G.V. Endowment Oration) என்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 



சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் மும்பை ஐ.ஐ.டி பேராசிரியர் கே.ராமசுப்பிரமணியன், "பண்டைய இந்தியாவின் அறிவியல்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும், ஜி வரதராஜ் மற்றும் பி.எஸ்.ஜி நிறுவனங்கள் சமூகத்திற்கு அளித்த பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவித்தார்.



பண்டைய இந்தியாவின் விஞ்ஞானத்தைப் பற்றி பேசிய அவர், "விஞ்ஞானம் வெளிப்புற உண்மைகளை பரிசோதிப்பது மட்டுமல்லாமல், விஞ்ஞானம் உள் உண்மைகளையும் கையாள்வதாகவும், விஞ்ஞானம் என்பது நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் பல்வேறு அம்சங்களை குறிக்கிறது", என்றார்.



மேலும் அவர் கூறுகையில், தற்போதைய கல்வி முறை மற்றும் கருத்து மாற்றப்பட வேண்டும் என்றும் இந்த முறையில் மாணவர்களிடையே குறிப்பிட்ட தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள செய்துள்ளதாக கூறினார். மாணவர்கள் தகவல்களை சேகரித்துப் படிப்பதற்கு பதிலாக, புதிதாக ஒன்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.



பி.எஸ்.ஜி ஐடெக் கல்லூரி முதல்வர் பி.வி. மோகன் ராம் மற்றும் பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர் எஸ்.ராமலிங்கம் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....