நீலகிரி : கூடலூர் அருகே பென்னை பம்படு எனும் பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த பசு மாட்டை துரத்தித் தாக்கிய சிறுத்தையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அதிகமான கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ளன. இங்குள்ள வனப்பகுதிகளிலிருந்து அவ்வப்போது யானை மற்றும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் குடியிருப்பு பகுதிகளிலும் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், கூடலூர் அருகே பென்னை பம்படு எனும் பகுதியில் சுப்பிரமணி (45) என்பவரது பசு மாட்டை மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த நிலையில், திடீரென பசு அலறியதை கேட்டு அவர் சென்று பார்த்த போது, பசுவை சிறுத்தை தாக்கியது தெரியவந்தது. உடனே சத்தமிட்டதால், அப்பகுதியில் உள்ளவர்களும் கூச்சலிட்டதையடுத்து பசுவை தாக்கிய சிறுத்தை வனத்திற்குள் சென்றது.
சிறுத்தை தாக்கியதில் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்ட பசு உணவு உண்ண முடியாமல் தவித்து வருகிறது. இதுகுறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர், பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பாதுகாப்பு கருதி வன விலங்குகள் தாக்குதலில் இருந்து பாதுகாப்பை ஏற்படுத்தி தரவேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.