கோவை : கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4ம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் தாக்கிய விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவரது மகள் சவுரிபாளையம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பகுதியில் 4ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளியில் சிறுமியை சக மாணவர்கள் 3 பேர் தாக்கியுள்ளனர். இதில், சிறுமியின் கண்களுக்குச் செல்லும் நரம்புகளில் விரிசல் ஏற்பட்டு, கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்திடம் கோகுல்ராஜ் புகாரளித்தார்.

மேலும், தனது மகள் சக மாணவர்களால் தாக்குதல் நடத்தியது தொடர்பாக கோகுல்ராஜ் பீளமேடு காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இருப்பினும், பள்ளி தலைமையாசிரியர் தாக்கிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கோகுல்ராஜ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்தார்.