அரசுமயமாக்கப்பட்ட வங்கியில் 1 கோடியே 54 இலட்சம் மோசடி வழக்கில் கிளை மேலாளர் உள்ளிட்ட 12 பேருக்கு 2 ஆண்டுகால தண்டனை வழங்கி கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

ஈரோடு கனரா வங்கியில் கடந்த 2002ம் ஆண்டு கிளை மேலாளர் அங்கமுத்து உள்ளிட்ட 12 பேர் அவ்வங்கியில் 1 கோடியே 54 இலட்சம் பணம் மோசடியில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த புகார் மீது விசாரணை நடத்திய சிபிஐ, தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் 12 பேரையும் குற்றவாளி எனக்கூறி தீர்ப்பளித்தார். கிளை மேலாளர் அங்கமுத்து உள்ளிட்ட 12 பேருக்கு ஆண்டு கால கடுங்காவல் தண்டனையும்,அபராத தொகையாக நான்கு
இலட்சத்து 23 ஆயிரம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த17 ஆண்டுகளாக சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் 12 வங்கி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.