கோவை : கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டுயானை, மான், சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் உள்ளன. இந்த நிலையில் நீலகிரிக்கு செல்ல மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையை வாகன ஓட்டிகள் அதிகம் பயன்படுத்தி வரும் நிலையில் அங்கு சாலையின் ஓரத்தில் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் வீசுவது அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சிறுமுகை வனத்துறையினர் கோத்தகிரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, லாரி ஒன்றில் இருந்து மூட்டை மூட்டையாக கழிவுகளை எடுத்து வனப்பகுதியில் வீசபட்டு கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து அந்த லாரியை மடக்கி பிடித்து விசாரனை மேற்கொண்டனர்.
விசாரனையில் உதகை, எல்லநள்ளி பகுதியில் செயல்படும் தனியார் ஊசி தொழிற்சாலையில் இருந்து ஊசி கழிவுகள், பிளாஸ்டிக்கழிவுகள், பேப்பர்கழிவுகள் ஆகியவை மேட்டுப்பாளையத்திற்கு கொண்டுவரபட்டு வீசப்பட்டு வருவது தெரியவந்தது.
இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர் கழிவுகளை எடுத்து வந்து வனப்பகுதியில் வீசிய ஓட்டுநர், லூவிஸ் மற்றும் லாரி உரிமையாளர், மாணிக்கம், ஒப்பந்ததாரர் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
வன உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக மூவருக்கும் தலா ரூபாய் 80,000 என மொத்தம் ரூபாய் 2.4 லட்சம் அபராதம் விதிக்கபட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.