திருப்பூர் : இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் நவம்பர் மாதம் தீர்ப்பு வர இருக்கின்ற அயோத்தி வழக்கில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும், அதை தொடர்ந்து டிசம்பரில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படும் என நம்பிக்கையோடு இருப்பதாக பேட்டியளித்தார்.

மேலும், இந்து அறநிலையத்துறை சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் இடங்களுக்கு பட்டா வழங்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற திங்கள் கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார்.