தங்குமிடமின்றி தவிக்கும் பழங்குடி குக்கிராமம்: அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கு உதவிக்கரம் நீட்டுவோம்

கோவை : ஆனைகட்டியில் உள்ள கண்டிவழியின் பழங்குடியின குக்கிராமத்தில் உள்ள 20 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு அரசாங்கம் உதவி வழங்கினாலும், கூடுதல் நிதியுதவி இல்லாததால் வீட்டின் கட்டுமான பணிகளை தொடங்காமல் தவித்து வருகின்றனர்.


கோவை : ஆனைகட்டியில் உள்ள கண்டிவழியின் பழங்குடியின குக்கிராமத்தில் உள்ள 20 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு அரசாங்கம் உதவி வழங்கினாலும், கூடுதல் நிதியுதவி இல்லாததால் வீட்டின் கட்டுமான பணிகளை தொடங்காமல் தவித்து வருகின்றனர்.

மாநில அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு தொகையை வழங்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், ஒரு வீட்டைக் கட்டுவதற்கு தேவையான மீதமுள்ள தொகையை, பழங்குடியினரின் வருமானத்தை கொண்டு திரட்டுவது கடினம்.

மேலும், குக்கிராமத்தில் வசிக்கும் 80 பேரில் பெரும்பாலானவர்கள், செங்கல் சூளைகளிலும் அருகிலுள்ள கட்டுமான தளங்களிலும் தினசரி தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். சிலர் ஆடுகளை வளர்த்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் இணைந்து குக்கிராமத்தில் உள்ள வீடுகளின் நிலையை மதிப்பிடுவதற்கு ஆய்வு செய்ததோடு, வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு தலா ரூ.2.10 லட்சம் வழங்க முடிவு செய்தது. இந்த நிலையில், 300 சதுர அடியில் ஒரு வீட்டின் கட்டுமான பணிகளை முடிக்க, ஒரு நபருக்கு மேலும் ரூ.1 லட்சம் தேவைப்படுகிறது.

வழக்கமாக அரசு சார்பில் வழங்கப்படும் தொகையானது தவணை முறைகளில், நேரடியாக பயனாளிகளின் கணக்கில் வழங்கப்படுகிறது. கட்டுமானத்திற்கு ரூ.1.80 லட்சமும் சோலார் பேனல் அமைப்பதற்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த குக்கிராமத்தில் ஏற்கனவே மின்சார இணைப்பு பொருத்தப்பட்டிருப்பதால், ரூ.2.10 லட்சத்தையும் வீடுகட்டுவதற்கு அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளதாக ஆனைகட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜி.பி.என். ஜோஷுவா தெரிவித்தார்.



மேலும், இந்த குக்கிராமத்தில் உள்ள 20 வீடுகளுக்கு முன்னர் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் பெருநிறுவன நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ளன. காட்டு விலங்குகள் அதிகமாக காணப்படும் அப்பகுதியில், அவர்களுக்கு வீடுகட்டுவதற்கு பொதுமக்கள் நிதியுதவி அளித்து உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் குடியிருப்பாளர் ஒருவர் பேசுகையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் வசித்து வருவதாகவும், பருவமழையின் போது அனைத்து வீடுகளின் கூரைகளும் முற்றிலும் சேதமடைந்துள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

காட்டு விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் அப்பகுதியில், இருபது குடும்பங்கள் அச்சமின்றி அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கு, வீடுகட்ட நிதியுதவி அளிக்க விரும்பும் மக்கள், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி மூலம் ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உதவிக்கரம் நீட்டுவோம்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...