சர்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌ பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ சர்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌ பிறந்த தினத்தினை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள்‌ உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தலைமையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ எடுத்துக்கொண்டனர்‌.


கோவை : கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ சர்தார்‌ வல்லபாய்‌ பட்டேல்‌ பிறந்த தினத்தினை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள்‌ உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி தலைமையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ எடுத்துக்கொண்டனர்‌.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்தவர். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலை நோக்கு பார்வையால் ஒன்றிணைந்த தேச நல்லுணர்வினை பேண எனது பங்களிப்பை நல்குவேன் என்ற உறுதிமொழியை அரசு ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்த உறுதிமொழி நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) உமா மகேஸ்வரி, மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....