கோவை : மேட்டுப்பாளையம் - உதகை மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் இன்று முதல் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சின்னம். அடர்ந்த வனத்தில் பயணித்து காடுகளில் உள்ள இயற்கை அழகினை ரசிக்க இதற்கென தனி மகத்துவம் உண்டு. இந்த நிலையில், வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே மலை ரயில் பாதை அமைந்துள்ள மேட்டுப்பாளையம், கல்லார் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் மலைரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட காரணத்தால் கடந்த 18ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாளை முதல் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, அக்., 31, நவம்பர் 1 மற்றும் 2ம் தேதி வரை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மலை ரயில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.