மழை நீடிக்கும் பட்சத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

நீலகிரி : வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து நிலையில் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி : வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து நிலையில் நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.



நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த ஒரு வாரமாக தீவிரம் அடைந்து கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிறு மண் சரிவுகளும், பாறைகளும் மரங்களும் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை உள்ளது. 



இந்நிலையில், குன்னூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்டு அப்பகுதியில் நடக்கும் மண்சரிவு ஏற்பட்டால் உடனடியாக ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அருவங்காடு பகுதியில் 5 அபாயகரமான மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தற்போது மழை பெய்து வருவதால் அகற்ற சிரமாக உள்ளதால், மழை நிற்கும் பட்சத்தில் அந்த மரங்கள் அகற்றப்படும் என்றார்.

மேலும், தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...