மூடப்படாத ஆழ்துளை கிணறு பற்றி தகவல் தெரிவித்தால் சன்மானம்: ஆழ்துளை கிணறுகள் இலவசமாக மூடி தரப்படும் - யங் இந்தியன்ஸ் பவுண்டேசன்

கோவை : தமிழ்நாட்டில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூடி தர தயாராக உள்ளதாகவும், மூடப்படாத ஆழ்துளை கிணறு பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.2 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என யங் இந்தியன் பவுண்டேசன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை : தமிழ்நாட்டில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூடி தர தயாராக உள்ளதாகவும், மூடப்படாத ஆழ்துளை கிணறு பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.2 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என யங் இந்தியன் பவுண்டேசன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் யங் இந்தியன்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அந்த அமைப்பின் செயலாளர் விஷ்ணு பிரபு, தமிழ்நாட்டில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூடி தர தயாராக உள்ளதாகவும் 9150226634 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்த தகவல்களை அளிக்கலாம் என தெரிவித்தார்.



மேலும், மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆழ்துளை கிணறுகளை மூடும் பணிகளை விரிவுபடுத்த உள்ளதாகவும், நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித் உயிரிழப்பே இறுதியாக இருக்க வேண்டும்  என்பதற்காக இதனை செய்ய உள்ளதாக கூறினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....