திருப்பூரில் மருமகனுடன் திருமணத்திற்கு சென்ற மாமியார் விபத்தில் பலி: போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தவர்கள் மீது வெள்ளாளர் கல்லூரி பேருந்து மோதியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் : திருப்பூரில் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தவர்கள் மீது வெள்ளாளர் கல்லூரி பேருந்து மோதியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தனது மாமியார் பார்வதியுடன் (57) சிவன் மலைப்பகுதியில் நடைபெறவுள்ள திருமணத்திற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். திருப்பூர் சந்திராபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வெள்ளாளர் கல்லூரி பேருந்து மோதியதில் நிலைதடுமாறிய கருப்புசாமி கீழே விழுந்தார்.

இதில், பின்னால் அமர்ந்திருந்த மாமியார் பார்வதி கீழே விழுந்ததில், அவர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இதனைப் பார்த்த அந்த பகுதியினர் உடனடியாக பேருந்தை சிறைபிடித்து, காயம் பட்டிருந்த கருப்புசாமி உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சாலை விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்துக்கு காரணமான வெள்ளாளர் கல்லூரி பேருந்து ஓட்டுநர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். திருமணத்திற்கு செல்லும் வழியில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....