கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஏழு எறுமைப்பள்ளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஏழு எறுமைப்பள்ளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் புறநகர் பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வட கிழக்கு பருவமழை பெய்தது. இதனால் பெரியநாயக்கன்பாளையம் மலைப்பகுதியில் உருவாகி 15 கிலோ மீட்டர் பயணித்து, பவானி ஆற்றில் கலக்கும் மேட்டுப்பாளையத்தின் முக்கிய நீராதாரமான ஏழு எறுமைப்பள்ளத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் காரமடை அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் கோவில் பகுதியில் இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், அந்த பாலத்தினை கடந்து தான் சென்றாக வேண்டும். ஒரு வழிபாதை மட்டுமே இருந்த நிலையில், அது காட்டாற்று வெள்ளம் காரணமாக உடைந்து, சுமார் 10 அடிக்கும் மேல் பள்ளம் ஏற்பட்டு சாலைகளும் துண்டிக்கப்பட்டதால் அந்த கிராமத்திற்கு செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் முடங்கியுள்ளனர்.
மேலும், பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளதால் உடைந்த பாலத்தை சீரமைத்துத் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.