மயானத்திற்கு சாலை வசதி இல்லாததால் முட்புதர் வழியாக சடலத்தை தூக்கி செல்லும் அவலம்

கோவை : கோவை விளாங்குறிச்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய சாலை வசதியும், உடல்களை எரியூட்ட கூரை வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : கோவை விளாங்குறிச்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய சாலை வசதியும், உடல்களை எரியூட்ட கூரை வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது லெனின் வீதி மற்றும் அம்பேத்கர் நகர். இங்கு, சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட விளாங்குறிச்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி மயானம், சாதி இந்துக்களுக்குத் தனி மயானம் என இரட்டை மயான முறை இன்றளவும் இருந்து வருகின்றது.

சாதி இந்துக்கள் தங்கள் சமூகத்தில் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய சாலை வசதியும், உடல்களை எரியூட்ட கூரை வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தாழ்த்தப்பட்டவர்களின் உடல்களை அந்த சமூகத்திற்கான மயானத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி உட்பட போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்பட வில்லை.

இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இறந்துபோனால், அவர்களின் உடல்களை தனியார் நிலங்கள் வழியாகவும், சாக்கடை ஓடைகளின் வழியாகவும், முட்புதர்களின் வழியாகவும் தூக்கிச் சென்று அடக்கம் செய்து வருகின்றனர். இது குறித்து லெனின் வீதி மற்றும் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கும், கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் புகார் அளித்தும் இது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், விளாங்குறிச்சியில் பொது மயானம் வேண்டும் என்று தாங்கள் கேட்கவில்லை என தெரிவிக்கும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள், பிற சமூகத்தவரின் மயானத்திற்கு செல்ல வசதிகள் செய்து கொடுத்துள்ளதை போல தாழ்த்தப்பட்ட சமூகத்தவரின் மயானத்திற்கு செல்ல உரிய சாலை வசதி, கூரை வசதி உட்பட அடிப்படை வசதிகளை மட்டும் செய்து கொடுத்தால் போதும் என்றனர். மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் இருப்பதால், இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்ய கூட பெரும்பாலானவர்கள் வருவதில்லை என அப்பகுதி இளைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...