கோவை இரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

கோவை : கோவை இரயில் நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகளின் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை : கோவை இரயில் நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகளின் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை இரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் பயணிகள் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. 



குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில், ஏற்கனவே நடைமேடை ஒன்று ஏவில் அமைக்கப்பட்டிருந்த நகரும் படிக்கட்டுகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த போது பராமரிப்பு பணி காரணமாக, தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.

இதனிடையே, இரண்டாம் கட்டமாக அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுக்களின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்த பணிகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த பணிகள் தாமதாகி வருகிறது.



இது தொடர்பாக இரயில்வே அதிகாரிகளிடம் பேசிய போது, பணிகள் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் முடியும் என ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்துள்ளதாகவும், அதன் பின்னர் மாதிரி முன்னோட்டம் விடப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வமாக மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு பிறகு நகரும் படிக்கட்டுகள் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....