இரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதமாக வருகிறது முழு உடல் பரிசோதனை ஏ.டி.எம்கள்

கோவை : இரயில் பயணிகள் இரயிலுக்கு காத்திருக்கும் சில நிமிட நேரத்தில், முழு உடல் பரிசோதனையை இரயில் நிலையத்திலேயே செய்து கொள்ளலாம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா?. அதுவும் 50 ரூபாயில் என்று சொன்னால் மயக்கமடைந்துவிடாதீர்கள் உண்மை தான்.

கோவை : இரயில் பயணிகள் இரயிலுக்கு காத்திருக்கும் சில நிமிட நேரத்தில், முழு உடல் பரிசோதனையை இரயில் நிலையத்திலேயே செய்து கொள்ளலாம் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா?. அதுவும் 50 ரூபாயில் என்று சொன்னால் மயக்கமடைந்துவிடாதீர்கள் உண்மை தான்.

உடல் நலன் மீது அக்கறையில்லாமல் அன்றாட வாழ்வியலுக்காக அலைந்து திரிபவர்களிடம் ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொன்னால் சிரித்தபடியோ, இல்லை முறைத்தபடியோ விலகி சென்று விடுவார்கள். இல்லையென்றால், யார் சார் இதற்காக மருத்துவமனைக்கு போய் நாளெல்லாம் காத்திருக்கிறது என நம்மையே திரும்ப கேள்வி எழுப்புவார்கள் அல்லது கொஞ்சநஞ்ச காசா சார் ஆகும் என நம்மை எதிர்கேள்வி கேட்டு முகம் நோக்குபவர்களும் இருக்கவே செய்வார்கள்.

பரபரப்பான வாழ்க்கை சூழலில் இதெல்லாம் சகஜம் தான் என்றாலும் அதனை சில நிமிட நேரத்தில் மிகக்குறைந்த செலவில் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பெரும்பாலானவர்களும் அதனைச் செய்து கொள்ள தயாராகவே உள்ளனர். அத்தகைய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் விதமாக மத்திய அரசின் இரயில்வே துறை கொண்டு வந்துள்ள புதிய திட்டம் தான், இரயில் நிலையங்களில் அமைக்கப்பட உள்ள முழு உடல் பரிசோதனை மையங்கள்.

இரயிலுக்கு காத்திருக்கும் 3 முதல் 5 நிமிட நேரத்தில் இரயில் நிலையத்தில் உள்ள இந்த மையங்களுக்கு சென்றால் இரத்தக்கொதிப்பு, இதயத்துடிப்பு, சர்க்கரை அளவு, பி.எம்.ஐ எனப்படும் உடல் எடை கணக்கீடு உள்ளிட்ட 20 வகையான ஆய்வுகளை செய்து உடனடியாக அவற்றின் முடிவுகள் பயணிகளுக்கு வழங்கப்படுவது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த ஆய்வுக்கு பொதுமக்கள் 50 ரூபாயும், இரயில் பணியாளர்கள் 10 ரூபாயும் மட்டுமே கட்டணமாக செலுத்தினால் போதும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். இந்த மையங்களுக்கு அருகில் இரண்டு செவிலியர்கள் உடனிருப்பதோடு, கூடுதலாக மருத்துவ ஆலோசனைகளை வீடியோ கான்பிரன்சிங் முறையில் சிறந்த மருத்துவர்களிடம் அங்கேயே கேட்டுப்பெறலாம்.

வடமாநிலங்களில் உள்ள சில மெட்ரோ நிலையங்கள் மற்றும் முக்கிய இரயில் நிலையங்களில் பரிச்சார்த்த முறையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, செகந்திராபாத் இரயில் நிலையத்தில் நாள்தோறும் இந்த மையத்தை 200க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த திட்டம் எப்போது கோவை இரயில் நிலையத்தில் செயல்படுத்தப்படும் என சேலம் மண்டல இரயில்வே அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினோம். இதுவரையிலும் இதற்கான வரைவறிக்கையோ செயல்திட்டமோ தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் திட்டம் கிடைக்கப்பெற்றவுடன் விரைவில் இந்த மையங்கள் கோவை இரயில் நிலையத்திலும் அமைக்கப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

இதனை விரைவாக கோவை இரயில் நிலையத்தில் அமைக்க வேண்டும் என்பதே கோவை மக்கள் மற்றும் இரயில்வே பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...