கோவை : மேற்கு மண்டல காவல் எல்லையில் அனுமதி மீறி பட்டாசு வெடித்ததாக 46 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை சமயத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.
இதையடுத்து நீதிமன்றங்களிலும் பொது நல வழக்குகள் போடப்பட்டது.
இதனால் கடந்த ஆண்டு தமிழக அரசு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்து கட்டுப்பாடுகள் விதித்தது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மொத்தம் 2,100 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக ஈரோட்டில் ஒரு வழக்கும், நீலகிரியில் 24 வழக்குகளும், தர்மபுரியில் 17 வழக்குகளும் கோவையில் 4 வழக்குகளும் என மொத்தம் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் கோவையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் ஐடி ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.