திருப்பூரில் இரும்பு குடோனில் தீவிபத்து; 5 கார்கள் எரிந்து சேதம்

திருப்பூர் : திருப்பூரில் பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த கார் மெக்கானிக் ஷெட்டிற்க்கும் பரவியதால் 5 கார்கள் எரிந்து நாசமானது.


திருப்பூர் : திருப்பூரில் பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த கார் மெக்கானிக் ஷெட்டிற்க்கும் பரவியதால் 5 கார்கள் எரிந்து நாசமானது.



திருப்பூர் ஆலங்காடு பகுதியில் தர்மராஜ் (48) என்பவர் பழைய இரும்பு மற்றும் வேஸ்ட் பொருட்களை விற்பனை செய்யும் குடோன் நடத்தி வருகிறார். இன்று மாலை குடோனிலிருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.



இருப்பினும் அதற்குள் தீ, மளமளவென அருகில் இருந்த கார் மெக்கானிக் ஷெட்டிற்க்கும் தீ பரவி ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த 5 க்கும் மேற்பட்ட கார்களுக்கும் தீயில் எரிய துவங்கியது.

சம்பவ இடத்திற்க்கு திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்பகுதியில் சிலர் பட்டாசு வெடித்ததே இந்த விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...