மாவோயிஸ்ட் - தண்டர்போல்ட் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு: 3 மாவோயிஸ்ட்டுகள் உயிரிழப்பு

கோவை : கோவை அருகே உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் தண்டர்போல்ட் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு பெண் மாவோயிஸ்ட் உட்பட மூன்று மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


கோவை : கோவை அருகே உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் தண்டர்போல்ட் போலீஸாருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு பெண் மாவோயிஸ்ட் உட்பட மூன்று மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.



கேரளாவில் உள்ள பாலக்காடு, வயநாடு போன்ற மாவட்டங்கள் மாவோயிஸ்ட்டுகள் அதிகம் நடமாடும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அடர்ந்த காடுகள் உள்ள இந்த பகுதிகளில் வசித்து வரும் ஆதிவாசி மக்களை அரசுக்கு எதிராக மாவோயிஸ்ட்டுகள் திசைத் திருப்புவதாகவும் தொடர்ந்து உளவுத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து ஏற்பட உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதில் குறிப்பாக கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, வயநாடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாகவும் மத்திய உளவுத்துறை கேரள அரசுக்கு தகவல் அனுப்பியது.

இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மஞ்சக்கட்டி மலைப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக கேரள அதிரடிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று காலை 50க்கும் மேற்பட்ட தண்டர்போல்ட் போலீசார் மாவோயிஸ்ட்டுகள் இருக்கும் வனப்பகுதிக்கு சென்றனர்.

அப்போது, வனப்பகுதிக்குள் காவல் துறையினர் வந்ததையறிந்த மாவோயிஸ்ட்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலீசாரும் எதிர்த்தரப்பு தாக்குதல் நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் கார்த்திக் ,சுரேஷ், மற்றும் ஸ்ரீமதி என மூன்று மாவோயிஸ்டுகள் இறப்பு.



மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாலக்காடு எஸ்பி விக்ரம் சிவா மற்றும் மாவட்ட துணை ஆட்சியர் பாண்டியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...