வால்பாறை ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் 7ம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் 7ம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறை ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் 7ம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி மேளதாள வாத்தியத்துடன் கோவில் வளாகத்தை சுற்றி வந்தார். 

தீபாராதனைக்குப்பின் காலை 10.30 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் கோவில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மந்திரங்கள் முழங்க அரோகரா கோசத்துடன் கொடி ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாரதனைகளும் நடைபெற்றது. 

தொடர்ந்து 2ம் தேதி சனிக்கிழமை சூரசம்கார நிகழ்ச்சியும் மறுநாள் திருக்கல்யாணமும் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை சிங்காரி மேளம், சிக்காட்டம் மேளதாள வாத்தியத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் தேவிகள் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தேர்ப்பவனி நடை பெறுகிறது. இரவு கொடி இறக்கமும் நடைபெறுகிறது. தொடர்ந்து வாண வேடிக்கை நடைபெறுகிறது. 

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கந்த சஷ்டி விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...