திருப்பூர் : திருப்பூரில் தீபாவளி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 225 கிலோ இறந்த இறைச்சி கோழிகள் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், 4 பெண்கள் உட்பட ஐந்து பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மருதாச்சலபுரம் பகுதியில் பண்ணையில் நோய்கள் வந்து இறந்த நாட்டுக்கோழிகளை விற்பனை செய்யப்படுவதாகத் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது, விஜய் என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடையில் கோழி பண்ணைகளில் நோய் வந்து இறந்த கோழிகளை எடுத்து வந்து, மஞ்சள் கலர் தடவி விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, அந்த கடையில் தீபாவளி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 225 கிலோ இறந்த இறைச்சி கோழிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், அங்கு கோழி விற்பனையில் ஈடுபட்டிருந்த விஜய், காயத்ரி, அமுதா, லதா, இன்பவள்ளி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும், இறந்த இறைச்சி கழிவுகளை எடுத்து சென்ற அதிகாரிகள், அவற்றை தீயிலிட்டு எரித்தனர்.