கோவையில் தாறுமாறாக வந்த லாரி ; நூலிழையில் உயிர் தப்பிய மூன்று பயணிகள்

கோவை : கோவையில் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் மீது மோத வந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கோவை : கோவையில் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் மீது மோத வந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவை பல்லடம் செட்டிபாளையம் சாலையில் உள்ள சித்தநாயகன்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அலுவலகம் அருகே கட்டப்படாத பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது.



இந்நிலையில், இன்று காலை பேருந்துக்காக சித்தநாயகன்பாளையம் கிராமத்தை சேர்ந்த தாமோதர பிரகாஷ், தீபிகா, சுசீலா ஆகிய மூவர் காத்திருந்தனர். அப்போது, அந்த வழியே தாறுமாறாக வந்த லாரியானது பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மீது மோத வந்தது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த பயணிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பின்புறமாக ஓடியபோது சாலையின் அருகே தோண்டப்பட்ட குழியில் விழுந்தனர்.



இதையடுத்து, இவர்கள் 3 பேரும் நொடிப்பொழுதில் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த காட்சிகள் அருகே உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பலமுறை அந்த பகுதியில் வேகத்தடையும், முறையான பேருந்து நிறுத்தமும் அமைத்துத் தரக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் தற்போது அதிவேகமாக வந்த லாரி ஆனது பொதுமக்கள் உயிரை பறிக்க முற்பட்டுள்ளது.

மேலும், அடுத்தகட்டமாக பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன், இந்த சாலைகளில் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...