பவானி ஆற்று வெள்ளநீரில் மூழ்கிய உயர்மட்ட பாலத்தால் ஆபத்தான பரிசல் பயணம்..! பாலம் அமைத்து தர கோரிக்கை

கோவை : மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று வெள்ளத்தால் நீரில் உயர்மட்ட பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி கிராம மக்கள் அபாய பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று வெள்ளத்தால் நீரில் உயர்மட்ட பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி கிராம மக்கள் அபாய பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை பருவமழை காரணமாக மூன்றாவது முறையாக நிரம்பியது. தென் மேற்கு பருவமழையை தொடர்ந்து வட கிழக்கு பருவமழையும் முன்கூட்டியே துவங்கியதால், பில்லூர் அணை நிரம்பி அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட உபரி நீர், பவானி ஆற்றின் வழியே பவானிசாகர் அணையை அடைந்த நிலையில் பவானிசாகர் அணையும் நிரம்பியது.



இதன் காரணமாக அதன் நீர்த்தேக்க பகுதியில் தண்ணீரானது அதிகரித்து கொண்டே வந்தது. இதனால் 30 அடி உயரம் கொண்ட இந்த உயர் பாலம் பவானி சாகர் அணை 100 அடியை எட்டும் போது முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி பாலத்திற்கு மேல் சுமார் 5 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

இப்பாலத்தினை கடந்து சென்றே காந்தவயல், உளியூர், ஆலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால், தற்போது கிராமத்தையும் கிராமத்தினை நகரத்துடன் இனைக்கும் பாலம் என முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தானது முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த கிராமங்களில் இருந்து நகரத்தினை அடைய நாற்பது அடிக்கும் மேல் தேங்கியுள்ள தண்ணீரில் ஆபத்தான முறையில் எவ்வித பாதுகாப்பு வசதிகளுமின்றி பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பருவமழையின் போது தொடர்ந்து மூன்று ஆண்டுக்கு மேல் இதே நிலைமை நீடிப்பதால், விவசாய விளைப்பொருட்களை கூட பரிசலில் எடுத்து வருவதால் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக அப்பகுதி கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...