நெருங்கும் தீபாவளியால் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்: கோவை கடைவீதி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவை : தீபாவளி பண்டிகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், கோவையில் கடைவீதி பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுவதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை : தீபாவளி பண்டிகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், கோவையில் கடைவீதி பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுவதால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



கோவையில் தீபாவளி பண்டிகை என்றாலே கடைவீதி பகுதிகளான டவுன்ஹால், காந்திபுரம், ஆர்எஸ் புரம், உள்ளிட்ட பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம். இந்த பொதுமக்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி கொள்ளையர்கள் ஆண்டுதோறும் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.



இந்நிலையில், இந்த ஆண்டு ஜேப்படி கொள்ளையர்களிடமிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையாளர்கள் பாலாஜி சரவணன் மற்றும் பெருமாள் ஆகியோர் மேற்பார்வையில் தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அதேபோல, காந்திபுரம், உக்கடம், ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட 7 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், போலீசார் சந்தேகப்படும் நபர்கள் தென்பட்டால் உடனடியாக கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல, மஃப்டி உடையில் பொதுமக்கள் போல போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...