நீலகிரி : குன்னூர் கொலக்கம்பை அருகேயுள்ள நெடுக்கல் கம்பை கிராமத்தில் பொதுமக்களை மூளைச்சலவை செய்த மாவோயிஸ்ட் டேனிஸ் (எ) கிருஷ்ணாவை இன்று உதகை நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்.

குன்னூர் அருகே நெடுகல் கம்பை ஆதிவாசி கிராமத்திற்கு கடந்த ஆண்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த டேனிஸ் என்கிற கிருஷ்ணன் ஆதிவாசி மக்களை இயக்கத்தில் சேர்க்கும் எண்ணத்துடன் அவர்களை மூளைச் சலவை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு இன்று உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கினை விசாரித்த நீதிபதி முரளிதரன், வரும் நவம்பர் 22 ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் டேனிஸ் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.