தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய நற்பணி அறக்கட்டளை

கோவை : தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டவர்களுக்கு நற்பணி அறக்கட்டளையினர் பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.


கோவை : தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டவர்களுக்கு நற்பணி அறக்கட்டளையினர் பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.



படிக்கும் வயதில் உள்ள குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டு பணிக்கு அனுப்புவதை தடுக்கும் நோக்கில் 1995ம் ஆண்டு தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இவ்வாறு மீட்கப்படும் குழந்தைகளுக்கு (என்.சி.எல்.பி) மூலம் கல்வி வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பு வரை பாடங்கள் கற்பிக்கப்பட்ட பின்னர், முறைசார்ந்த பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பிறகு மீட்கப்பட்ட குழந்தைகளின் உயர் கல்விக்கு தேவையான உதவிகள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.



இவ்வாறு, கடந்த ஆண்டு மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 50 பேருக்கு உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த பாரத மாதா அறக்கட்டளை உறுப்பினர்கள் மதிய உணவு வழங்கி, தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடிட முப்பதாயிரம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



அதேபோல, மாவட்ட ஆட்சியர் அலுவலக குழந்தைகள் ஒழிப்பு அலுவலகம் வந்திருந்தவர்களுக்கு திட்ட இயக்குனர் விஜயகுமார் மற்றும் மன்ற உறுப்பினர்கள் பட்டாசு மற்றும் இனிப்புகளை வழங்கினர். வெள்ளலூர், கொண்டி நகர் மற்றும் அறிவொளி நகர் பகுதியில் இருந்து வந்திருந்த, மீட்கப்பட்ட குழந்தைகள் இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஹரியானா,பீகார் மற்றும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மீட்கப்பட்டவர்கள் இந்த குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....