கோவை : நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் நாட்டு மரங்களை வளர்க்கும் முயற்சியாக ஒரு லட்சம் இயல் தாவர மரக்கன்று நட திட்டமிடப்பட்டது. இதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று துவக்கி வைத்தார். கல்லூரி வளாகத்தில் நீலமலை அடிவாரத்தில் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் கொண்டு மரங்கள் நடப்பட்டன.
இதில், 35 வகைகளை சேர்ந்த சந்தனம், புரசு, தான்றிக்காய், அலுன்ஜி,கா லிட்சி, தனுக்கு, வேம்பு, கருவேல், இலுப்பை, புங்கம், மற்றும் பூவரசு போன்ற நாட்டு மரங்கள் நடப்பட்டன.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நமது பாரதத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரம் வளர்ப்பது என்பது மிகவும் இன்றியமையாதது என குறிப்பிட்ட அவர், அதுவும் நாட்டு ரக மரங்களை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி மண்வளமும் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தமிழக ஆளுநர் பண்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல, நாட்டில் ஒவ்வொரு வரும் பிறந்த நாட்களில் விழா கொண்டாடும் போது, தாங்களும் தங்கள் குழந்தைகளுக்கும் மரம் வளர்ப்பதை கற்றுக்கொடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டார்.