ஆலயம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான இலவச யோகா மையம் துவக்கம்

கோவை : ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் வடவள்ளியில் உள்ள ஆலயம் பயிற்சி வளாகத்தில் பெண்களுக்கான இலவச யோகா பயிற்சி முகாம் துவங்கப்பட்டு உள்ளது.

கோவை : ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் வடவள்ளியில் உள்ள ஆலயம் பயிற்சி வளாகத்தில் பெண்களுக்கான இலவச யோகா பயிற்சி முகாம் துவங்கப்பட்டு உள்ளது.

ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் இந்த பயிற்சி முகாமை துவக்கிவைத்து பேசுகையில், பெண்களுக்கான இந்த பயிற்சி மையத்தில் காலை 7 முதல் 9 மணி வரையிலும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் பயிற்சி தரப்பட உள்ளதாக தெரிவித்தார். மன அழுத்தம், சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சிறப்பு யோகா பயிற்சி இங்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், கோபம், விரக்தி போன்றவற்றை தவிர்க்கும் வகையில் மன ரீதியான முன்னேற்றம் தரும் வகையில் மனதை சிறப்பாக கையாளும் வகையில் பயிற்சி தரப்படுவதாகவும் இந்த பயிற்சி பெண்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 86107 79271, 97894 17122 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அப்போது தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியின் போது ஆலயம் அறக்கட்டளை வளாகத்தில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 800 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு இலவசமாக வேட்டி, சேலை, பட்டாசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆலயம் அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....