10 அடி சாலையில் சீறிப்பாயும் வாகனங்கள்: வேகத்தடை அமைக்க கோரிக்கை

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட 82வது வார்டு, சாமியார் புதுவீதி பகுதியில் 10 அடி அகலம் கொண்ட சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கும், மக்களும் விபத்து ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட 82வது வார்டு, சாமியார் புதுவீதி பகுதியில் 10 அடி அகலம் கொண்ட சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கும், மக்களும் விபத்து ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாநகராட்சிக்குட்பட்ட 82வது வார்டு, சாமியார் புதுவீதி பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீதியில் 10 அடி அகலம் கொண்ட சாலையில் எதிர் எதிர்புறம் வீடுகள் அமைந்துள்ளன. உக்கடம் கோட்டை மேடு, வின்சென்ட் ரோடு, ஜி.எம்.நகர், கோட்டைப்புதூர், அண்ணாநகர், கரும்புக்கடை மற்றும் பைபாஸ் பகுதிகளில் இருந்து காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 3 மணி முதல் 6 மணி வரை பெரிய கடை வீதி ரோட்டின் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு மிகவும் வேகமாக வாகனங்கள் செல்கின்றன.

இதனால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கும், தெருவில் நடந்து வரும் குழந்தைகளுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் உள்ள மிகக்குறுகிய சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் நாங்கள் தெருவை கடக்க மிகுந்த சிரமப்படுவதாகவும் மெதுவாக செல்லுங்கள் என்று கூறினால் தகராறு செய்வதாக கூறினார்.



மேலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேகத்தடை அமைத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இப்பகுதியில் விபத்துகள் ஏற்படுவதற்குள் மாநகராட்சி நிர்வாகம் வேகத்தடை அமைத்து, வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...