கோவை : தமிழக சுற்றுலா துறை மற்றும் ஈஷா யோகா மையம் சார்பில் ஆதியோகி முன்பு தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்றது.

தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் தமிழக சுற்றுலா துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள், கோயில்கள், பாரம்பரிய புராதன இடங்களில் தூய்மை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலமாகவும், கோவையின் முதன்மை சுற்றுலாதலமாகவும் விளங்கும் ஈஷாவில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி, ஆதியோகி முன்பு கலை நிலா கிராமிய கலை குழுவினர் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. வீதி நாடக பாணியில் கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் மற்றும் கோலாட்டம் ஆகிய நடனங்கள் மூலம் சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.