தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈஷா யோக மையம் சார்பில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ இலவச யோகா வகுப்புகள்‌

கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈஷா யோக மையம் சார்பில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈஷா யோக மையம் சார்பில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

நமது உடல்‌, நமது மனம்‌, நமது உயிர்‌ போன்றவை பற்றிய கெளிவு நமக்கு இருக்க வேண்டும்‌. நமது வாழ்க்கையின்‌ நோக்கம்‌ குறித்த தெளிவு நமக்கு இருக்க வேண்டும்‌. நீங்கள்‌ உங்கள்‌ முன்‌ உள்ள விஷயங்களை தெளிவாக பார்க்க இயலவில்லை என்றால்‌ - கண்ணால்‌ பார்ப்பது மட்டுமல்ல, மற்ற ஓவ்வொரு வழிகளிலும்‌ கூட - நீங்கள்‌ உங்கள்‌ முன்‌ உள்ள வாழ்க்கையை தெளிவுடன்‌ உள்வாங்க முடியவில்லை என்றால்‌, எளிய சூழ்நிலையும்‌ கூட சிக்கலாக மாறிவிடும்‌. தெளிவு நேரும்‌ போது தான்‌, நீங்கள்‌ விடுதலை அடைகிறீர்கள்‌, முழுமையான தெளிவு உங்களை அடையும்போது, உங்கள்‌ விடுதலையும்‌ முழுமையடைகிறது. தீபாவளி என்பது இதுதான்‌. இந்த தீபாவளித்‌ திருநாளன்று, நமக்குள்‌ தெளிவையும்‌ ஒளியையும்‌ பெற விரும்புகிறேன்‌. ஈஷாவில்‌ நடத்தப்படும்‌ உயிர் நோக்கம்‌ என்னும்‌ வகுப்புக்கு, தீபாவளி அன்று மட்டும்‌, எந்தக்‌ கட்டணமும்‌ இன்றி நீங்கள்‌ படிவு செய்ய முடியும்‌. தமிழ்நாட்டில்‌ உள்ள தமிழ்‌ மக்களுக்கு இது ஈஷா யோக மையத்தின தீபாவளி அன்பளிப்பு என ஈஷா யோக மையத்தின் நிறுவர், ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். 

இந்த தீபாவளி திருநாள்‌ உங்களுக்கு மிகவும்‌ சிறப்பாக அமையட்டும்‌! அதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்‌. இவ்வாறு அவர் வாழ்த்து கூறினார்.

இந்த உயிர் நோக்கம்‌ யோகா வகுப்பில்‌ இலவசமாக பங்கேற்க விரும்புபவர்கள்‌ அக்டோபர்‌ 25, 26 மற்றும்‌ 27 ஆகிய தேதிகளில்‌ 83000 83000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால்‌ கொடுத்தோ அல்லது isha.sadhguru.org/uyirnokkam என்ற இணையதளத்தின்‌ மூலமோ பதிவு செய்து கொள்ளலாம்‌. அந்த மூன்று நாட்களில்‌ பதிவு செய்பவர்களுக்கு நவம்பர்‌ மற்றும்‌ டிசம்பர்‌ மாதங்களில்‌ அந்தந்த ஊர்களிலேயே இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்படும்‌. வகுப்பு நடக்கும்‌ இடம்‌ மற்றும்‌ தேதி போன்ற விவரங்கள்‌ தொலைபேசி அல்லது இ-மெயில்‌ மூலம்‌ தெரிவிக்கப்படும்‌.

இந்த யோகா வகுப்பு 3 நாட்கள்‌ தினமும்‌ 2 மணி நேரம்‌ நடைபெறும்‌. இதில்‌ யோக நமஸ்காரம்‌, நாடி சுத்தி, ஈஷா க்ரியா ஆகிய பயிற்சிகள்‌ கற்றுக்கொடுக்கப்படும்‌. இப்பயிற்சிகளை தினமும்‌ செய்வதன்‌ மூலம்‌ பல பயன்களை பெற முடியும்‌. குறிப்பாக, உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்படும்‌, மற்றவர்களுடனான உறவுகள்‌ மேம்படும்‌. மன அழுத்தம்‌ நீங்கி ஆனந்தமாக வாழ முடியும்‌.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....