தாயை பிரிந்த குட்டி யானை அம்மு: மீண்டும் முதுமலை முகாமிற்கு கொண்டுவரப்பட்டது

ஈரோடு : சத்தியமங்கலத்தில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட அம்மு என்கின்ற குட்டி யானை இன்று காலை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. வனத்துறையினர் சிறப்பு பூஜைக்கு பிறகு குட்டி யானையை பெற்றுக் கொண்டனர்.

ஈரோடு : சத்தியமங்கலத்தில் தாயை பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட அம்மு என்கின்ற குட்டி யானை இன்று காலை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. வனத்துறையினர் சிறப்பு பூஜைக்கு பிறகு குட்டி யானையை பெற்றுக் கொண்டனர்.

கடந்த மாதம் 26ம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் பகுதியில் தாயை பிரிந்த நிலையில் குட்டி யானை காணப்பட்டது. தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து சத்தியமங்கலம் வன கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இந்த மாதம் 4ம் தேதி குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். இந்த நிலையில், குட்டி யானை மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டதற்கு வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் குட்டி யானையை கடந்த 20 தினங்களாக வனப்பகுதிக்குள் வைத்து தாயுடன் சேர்க்கும் முயற்சி நடந்து வந்த நிலையில், வனத்துறையினரின் இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இதனையடுத்து, வனத்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், இன்று அதிகாலை சத்தியமங்கலத்தில் இருந்து வனத்துறை வாகனம் மூலம் குட்டி யானை முதுமலைக்கு புறப்பட்டது. காலை சுமார் 10.30 மணியளவில் குட்டி யானை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. வனத்துறை மருத்துவ குழுவினர் யானை குட்டியை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனர். குட்டி யானைகளை பராமரிக்க ஏற்கனவே தயார் நிலையில் உள்ள கராலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.


பின்னர் சத்தியமங்கலம் வனத்துறையினர், முதுமலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் குட்டி யானை கராலுக்குள் அனுப்பப்பட்டது. சத்தியமங்கலத்தில் வைத்து குட்டி யானையை பராமரித்த வேட்டை தடுப்பு காவலர்களை பிரிய மனமில்லாமல் சத்தம் போட்டுக் கொண்டே உள்ளது.

இந்த நிலையில், சத்தியமங்கலத்தில் குட்டி யானையை பராமரித்த 3 வேட்டை தடுப்பு காவலர்கள் சில நாட்கள் குட்டியுடன் இருப்பார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே ஓசூரில் இருந்து பிடித்து வரப்பட்ட குட்டி யானை ரகுவை பராமரித்து வரும் பாகன் பொம்மன், இந்த யானையையும் பராமரிப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....