கோவை பன்னிமடையில் மின்சாரம் தாக்கியதில் பெண் உட்பட இருவர் பலி

கோவை : கோவை பன்னிமடை அருகே இறப்பு குறித்து விசாரிக்க வந்த வீட்டில் உறவினர் மீது மின்சாரம் தாக்கியதையடுத்து, அவரை காப்பாற்றச் சென்றவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவை பன்னிமடை அருகே இறப்பு குறித்து விசாரிக்க வந்த வீட்டில் உறவினர் மீது மின்சாரம் தாக்கியதையடுத்து, அவரை காப்பாற்றச் சென்றவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பன்னிமடை சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (26). இவரது தாத்தா பழனிச்சாமி கடந்த 15ம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில், இறப்பு குறித்து விசாரிப்பதற்காக உறவினர் துர்கையம்மாள்(56) பன்னிமடையில் உள்ள ரவிக்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.


இந்த நிலையில், ரவிக்குமார் வீட்டின் நுழைவாயில் கேட்டில் மின் கசிவு ஏற்பட்டுள்ளதை அறியாத துர்க்கையம்மாள் இயற்கை உபாதைக்கு செல்லும் போது, தூக்க கலக்கத்தில் கேட்டை பிடித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக துர்க்கையம்மாள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து துர்க்கையம்மாளின் அலறல் சத்தம் கேட்டு ரவியும் ஓடி வந்து காப்பாற்ற முற்பட்டார். இதில் இருவருமே சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தடாகம் போலீசார், மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து இணைப்பைத் துண்டித்தனர். பின்னர், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தடாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....