கோவை : கோவை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகள், சாலை ஓரங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குப்பைகள் கொட்டப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள்/நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:-
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதனடிப்படையில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் மஸ்தூர் பணியாளர்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடீஎஸ் கொசுக்கள் உருவாக்கும் இடங்களான பயன்பாடற்ற பானைகள், பழைய டயர்கள், பிளாஸ்டிக்குகள், செடிகள் வளர்க்கப்படும் தொட்டிகளின் வடிதட்டு, OHT/Syntex 1ல் உரல்கள், ஆட்டுக்கல், குளிர்சாதனப் பெட்டிகள், தேங்காய் சிரட்டைகள் மற்றும் அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வீடு வீடாக முறையாக குப்பைகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் பல்வேறு விடுதிகள், அரசு மற்றும் பொது சுகாதார வளாகங்கள், தொழிற்சாலைகள், வீட்டுவசதி வாரியம் மற்றும் 5100 ௦௨ பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், சினிமா தியேட்டர், தீம் பார்க் மற்றும் பொழுதுபோக்கு வளாகங்கள், திருமண மண்டபம் மற்றும் அனைத்து மதச்சார்பு பகுதிகளிலும் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்றவும், குப்பைகள் சேராவண்ணம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குப்பைகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது. நீர்நிலைகள் மற்றும் அரசு பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதன் மூலம் நிலத்தடி நீர் மாசடைவதுடன் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே, கோவை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர்நிலைகள், சாலை ஓரங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குப்பைகள் கொட்டக்கூடாது. இவ்வாறு குப்பைகள் கொட்டுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள்/நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்தார்.